அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 01.10.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 01.10.2022

மேஷம்
அசுவினி: முயற்சிகள் இழுபறியாகும். செயல்களில் கவனம் தேவை. வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும்.
பரணி: சந்திராஷ்டமம் தொடர்வதால் பணியிடத்தில் பிறரை அனுசரித்துச் செல்வது நன்மையாகும்.
கார்த்திகை 1: எதிர்பார்த்த ஒன்று நடைபெறாமல் போகும். சிலர் சட்ட ரீதியான சங்கடத்தை அடைவீர்கள்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: வேலை வாய்ப்பை எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல செய்தி வரும். நன்மையான நாள்.
ரோகிணி: உற்சாகத்துடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.
மிருகசீரிடம் 1, 2: உறவினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். எதிர்பார்த்த வரவு உண்டு.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: உடல் நிலையில் இருந்த பாதிப்பு விலகும். உற்சாகமுடன் செயல்படுவீர்கள்.
திருவாதிரை: எதிரிகளால் உண்டான பிரச்னைகளுக்கு சட்ட ரீதியாக முடிவு கட்டுவீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3: சேமிப்பில் ஆர்வம் ஏற்படும். குடும்பத்தினர் நலனில் அக்கறை அதிகரிக்கும்.

கடகம்
புனர்பூசம் 4: வியாபாரத்தில் புதிய மாற்றங்களை செய்வீர்கள். லாபம் அதிகரிக்கும்.
பூசம்: பெரியவர்களின் ஆலோசனையை ஏற்று செயல்படுவீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ஆயில்யம்: வீட்டை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உங்கள் விருப்பம் நிறைவேறும்.

சிம்மம்
மகம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். திட்டமிட்டு செயல்பட்டு முயற்சியில் லாபம் காண்பீர்கள்.
பூரம்: உங்களது செயல்களை பிறர் பாராட்டுவர். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
உத்திரம் 1: வியாபாரம் சம்பந்தமாக நீங்கள் மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும்.

கன்னி
உத்திரம் 2, 3, 4: நீண்ட நாள் முயற்சி ஒன்றில் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தை விரிவு செய்வீர்கள்.
அஸ்தம்: பணியிடத்தில் உங்கள் ஆலோசனை ஏற்கப்படும். உயரதிகாரிகள் உங்களைப் பாராட்டுவர்.
சித்திரை 1, 2: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்கும் முயற்சி நிறைவேறும்.

துலாம்
சித்திரை 3, 4: உங்கள் முயற்சிகளுக்கு தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வர்கள்.
சுவாதி: எதிர்பார்த்த வரவு வந்து சேரும். பண விவகாரத்தில் கவனம் தேவை.
விசாகம் 1, 2, 3: குடும்பத்தினர் உதவியுடன் தொழிலை விரிவு செய்வீர்கள். ஆதாயம் அதிகரிக்கும்.

விருச்சிகம்
விசாகம் 4: விருப்பம் நிறைவேறும். அலைச்சல் உண்டானாலும் முயற்சியில் லாபம் காண்பீர்கள்.
அனுஷம்: தொழில் ரகசியங்களை யாருக்கும் தெரிவிக்க வேண்டாம். வரவு செலவில் கவனம் தேவை.
கேட்டை: பொன் பொருள்களை கையாளுவதில் கவனம் தேவை. வேறு சிந்தனைக்கு இடமளிக்க வேண்டாம்.

தனுசு
மூலம்: வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். திடீர் செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.
பூராடம்: எதிர்பாராத பயணம் ஏற்படும். சகபணியாளர்கள் உங்களுக்கு எதிராக செயல்படுவர்.
உத்திராடம் 1: திடீர் செலவுகளால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். நண்பர்கள் உதவியுடன் சமாளிப்பீர்கள்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4: திட்டமிட்ட செயல் எளிதாக நிறைவேறும். எதிர்பார்த்த வரவு உண்டு.
திருவோணம்: நண்பர்கள் உதவியுடன் உங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.
அவிட்டம் 1, 2: தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவார்கள். உங்கள் நீண்டநாள் விருப்பம் நிறைவேறும்.

கும்பம்
அவிட்டம் 3, 4: நேற்றுவரை நிறைவேறாமல் இருந்த ஒரு முயற்சி இன்று நிறைவேறும்.
சதயம்: எதிர்பார்த்த பணம் வரும். புதிய முயற்சி ஒன்று ஆதாயத்தை உண்டாக்கும்.
பூரட்டாதி 1, 2, 3: வியாபாரத்தில் ஏற்பட்ட மந்த நிலையை சரி செய்வீர்கள். மகிழ்ச்சி கூடும்.

மீனம்
பூரட்டாதி 4: எதிர்பார்த்த செய்தி உங்களைத் தேடிவரும். கொடுக்கல் வாங்கலில் ஆதாயம் உண்டாகும்.
உத்திரட்டாதி: பணியிடத்தில் உங்களின் திறமை வெளிப்படும். மேலதிகாரிகள் பாராட்டுவார்கள்.
ரேவதி: வழிபாட்டில் மனம் செல்லும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் சரியாகும்