ராணியின் அரசு இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்ட 18 வயதான இராணுவ வீரர் மரணம்

#Queen_Elizabeth #Soldiers #Death
Prasu
2 years ago
ராணியின் அரசு இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்ட 18 வயதான  இராணுவ வீரர் மரணம்

லண்டனில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் 18 வயதான இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஜாக் பர்னெல்-வில்லியம்ஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த இராணுவ வீரர் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் அரசு இறுதிச் சடங்குகளில் கலந்துகொண்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அவரது மரணம் சந்தேகத்திற்குரியதாக கருதப்படவில்லை. இது குறித்த வழக்கு மரண விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மெட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதன்கிழமை பிற்பகல் 3.48 மணிக்கு லண்டன் ஆம்புலன்ஸ் சேவையைச் சேர்ந்த காவல்துறை மற்றும் துணை மருத்துவர்கள் மத்திய லண்டனின் இராணுவ முகாமுக்கு விரைந்தனர்.

எனினும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த கடினமான நேரத்தில் இராணுவ வீரரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்திருப்பதாக இராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!