திடீரென விழுந்து நொறுங்கிய இராணுவ ஹெலிகாப்டர் - மூன்று வீரர்கள் உயிரிழப்பு

Prasu
1 year ago
திடீரென விழுந்து நொறுங்கிய இராணுவ ஹெலிகாப்டர் - மூன்று வீரர்கள் உயிரிழப்பு

தபாஸ்கோவில் உளவுத்துறை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் மூன்று கடற்படையினர் கொல்லப்பட்டதாகவும் மேலும் இருவர் காயமடைந்ததாகவும் மெக்சிகோ கடற்படை தெரிவித்துள்ளது.

வான்வழி கண்காணிப்பு ரோந்து பணியின் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபாஸ்கோவின் ஃப்ரோன்டெரா நகருக்கு அருகில் விபத்துக்குள்ளானது.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

ஜூலை மாதம் மற்றொரு கடற்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி 14 கடற்படையினர் உயிரிழந்த சம்பவம் எரிபொருள் பற்றாக்குறையால் ஏற்பட்டது என்பதை அதிகாரிகள் ஒப்புக்கொண்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த விபத்து ஏற்பட்டது.

இந்த ஹெலிகாப்டர் தபாஸ்கோவில் உள்ள சென்ட்லா நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியது.

மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போதிலும், இந்த விபத்தில் கடற்படை வீரர்கள் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில் இதுபற்றி விரிவான விசாரணை நடத்த மெக்சிகோ கடற்படை உத்தரவிட்டுள்ளது.