அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 05.10.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 05.10.2022

மேஷம்
அசுவினி: எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். உங்களின் ஒரு முயற்சி வெற்றியாகும்.
பரணி: நீங்கள் மேற்கொள்ளும் செயல் நண்பர்களின் உதவியுடன் நிறைவேறும்.
கார்த்திகை 1: புதிய முயற்சி பலன் தரும். அடுத்தவரின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: பண வரவு அதிகரிக்கும் பழைய கடன்களை அடைப்பீர்கள்.
ரோகிணி: புதிய வாகனம் வாங்கும் முயற்சி நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மிருகசீரிடம் 1, 2: திட்டமிட்ட செயல் வெற்றியாகும். எதிர்பாராத வருமானம் வந்து சேரும்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: முயற்சிகளில் கவனம் தேவை. யோசித்து செயல்பட வேண்டிய நாள்.
திருவாதிரை: அலைச்சல் அதிகரிக்கும். மனதில் தேவையற்ற சிந்தனைகள் உண்டாகும்.
புனர்பூசம் 1, 2, 3: கூட்டுத் தொழிலில் குழப்பத்தை சந்திப்பீர்கள். அமைதி காப்பது நன்மையாகும்.

கடகம்
புனர்பூசம் 4: எதிர்வரும் பிரச்னைகளை முறியடித்து நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள்.
பூசம்: பொருளாதார நெருக்கடி விலகும். எதிர்பார்த்த தொகை இன்று வந்து சேரும்.
ஆயில்யம்: பெரியோரின் ஆலோசனைக் கேட்டு செயல்படுவதால் முயற்சியில் நன்மை உண்டாகும்.

சிம்மம்
மகம்: வாகனம் வாங்கும் முயற்சி நிறைவேறும். எதிர்பார்த்த பண வரவு உண்டு.
பூரம்: பகைவர்கள் தொல்லை நீங்கும். வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள்.
உத்திரம் 1: புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். நண்பர்கள் உதவி செய்வர்.

கன்னி
உத்திரம் 2, 3, 4: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். எதிர்பார்த்தவை அனுகூலமாகும்.
அஸ்தம்: தொழிலில் இருந்த தடைகள் விலகி வளர்ச்சி கூடும். பணியாளர் ஒத்துழைப்பார்கள்.
சித்திரை 1, 2: நண்பர்களின் துணையுடன் குடும்ப பிரச்னை ஒன்றில் தீர்வு காண்பீர்கள்.

துலாம்
சித்திரை 3, 4: நிதானமுடன் செயல்பட வேண்டிய நாள். சில செயல்கள் இன்று இழுபறியாகும்.
சுவாதி: அரசு வழியிலான முயற்சிகள் தள்ளிப்போகும். கோபத்திற்கு இடமளிக்க வேண்டாம்.
விசாகம் 1, 2, 3: பணியிடத்தில் கூடுதல் கவனம் தேவைப்படும். அன்பளிப்புகள் பெறுவதைத் தவிர்க்கவும்.

விருச்சிகம்
விசாகம் 4: நீங்கள் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். பயணத்தால் நன்மை உண்டு.
அனுஷம்: கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
கேட்டை: குடும்பத்தினரின் நலனுக்காக மேற்கொள்ளும் முயற்சி ஒன்று நிறைவேறும்.

தனுசு
மூலம்: வீட்டை மாற்றம் செய்ய முயற்சிப்பீர்கள். அதற்குரிய செயலில் ஈடுபடுவீர்கள்.
பூராடம்: வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் அகலும். உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும்.
உத்திராடம் 1: தம்பதி இடையே பிரச்னைகள் விலகும். கோயிலுக்கு செல்வீர்கள்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4: உறவினர்கள் உங்கள் வீடு தேடி வருவர். உங்கள் எண்ணம் நிறைவேறும்.
திருவோணம்: உங்கள் அணுகுமுறையால் நன்மைகளை அடைவீர்கள். புதிய முயற்சி நிறைவேறும்.
அவிட்டம் 1, 2: நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் இன்று வந்து சேரும்.

கும்பம்
அவிட்டம் 3, 4: நிதானமாகப் பேசி நன்மைகள் அடைய வேண்டிய நாள். எச்சரிக்கை அவசியம்.
சதயம்: குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறக் கூடிய அறிகுறிகள் தோன்றும். செலவுகள் கூடும்.
பூரட்டாதி 1, 2, 3: தொழிலில் எதிர்பார்த்த நன்மைகள் தள்ளிப்போகும். பொருளாதார நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.

மீனம்
பூரட்டாதி 4: எதிர்பார்த்த வரவு இன்று வந்து சேரும். உங்கள் முயற்சிகள் எளிதாக நிறைவேறும்.
உத்திரட்டாதி: அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டு.
ரேவதி: பணியிடத்தில் நீங்கள் எதிர்பார்த்திருந்த செய்தி வரும். மேலதிகாரியின் ஆதரவு உண்டு.