ஆப்கானிஸ்தானின் பள்ளிகளில் 13 வயது அல்லது அதற்கு மேற்பட்ட பூப்படைந்த மாணவிகளை தேடும் தலீபான்கள்

#Taliban #Women #Student
Prasu
1 year ago
ஆப்கானிஸ்தானின் பள்ளிகளில் 13 வயது அல்லது அதற்கு மேற்பட்ட பூப்படைந்த மாணவிகளை தேடும் தலீபான்கள்

ஆப்கானிஸ்தான் நாட்டில் கந்தகார் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்திலுள்ள பள்ளிகளில் கடந்த சில வாரங்களாக நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டுள்ள தலீபான்கள். 

இங்கு 13 வயதுடைய அல்லது அதற்கு மேற்பட்ட பூப்படைந்த மாணவிகள் இருக்கின்றார்களா என்று ஆய்வு செய்து அவர்களை பள்ளியிலிருந்து வெளியேற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து ஏற்கனவே கல்வியை இழந்த 30 லட்சம் பெண்களுடன் இவர்களும் சேர்ந்து கொண்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு தலீபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 13 வயதுடைய சிறுமிகள் அல்லது அதற்கு மேற்பட்ட பெண்கள், பூப்படைந்தவர்கள் 6வது பயிலும் பெண்கள் பள்ளிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து பெண் கல்வியை தடுப்பதற்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளில் இருந்தும் பல்வேறு கண்டங்களை தலீப்பான்கள் எதிர்கொண்டு வந்தாலும் தங்களது முடிவிலிருந்து அவர்கள் பின் வாங்குவதாக இல்லை. 

இதனை அடுத்து இஸ்லாமிய ஷரியத் சட்டப்படி பூப்படைந்த பெண்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் சேர்ந்து படிக்கக்கூடாது 

தற்போது ஆப்கானிஸ்தானில் போதுமான ஆசிரியைகள் இல்லாததால் பெண்களை கல்வி பயில அனுமதிக்க முடியாது என்று தெரிவிக்கின்றனர். 

மேலும் தலீபான்கள் பதவியேற்பதற்கு முன்னதாகவே பல இருபாலர் பள்ளிகளிலிருந்து பெண்கள் பள்ளிகள் தனியாக பிரிக்கப்பட்டுள்ளன. 

இங்கு பெண் கல்வியில் தலீபான்கள் யாருக்குமே சலுகைகள் அளிக்கவும் தயாராக இல்லை. 

இந்த கந்தகாரில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த 15 வயதுடைய சிறுமி பள்ளியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 

தன்னைப்போல சுமார் 100 சிறுமிகள் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டு இருப்பதாக அவர் கவலையுடன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.