ரஷ்யாவில் மனித உரிமை மீறப்படுவதால் ரஷ்யாவை கண்காணிக்க தீர்மானித்துள்ள ஐ.நா

Prasu
1 year ago
ரஷ்யாவில் மனித உரிமை மீறப்படுவதால் ரஷ்யாவை கண்காணிக்க தீர்மானித்துள்ள ஐ.நா

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போர் 7 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பெரும்பாலான இடங்களில் ரஷ்ய படைகள் பின்வாங்கியுள்ளன.

இதையடுத்து ராணுவத்திற்காக 3 லட்சம் வீரர்கள் அணி திரட்டவதற்கான ஆவணத்தில் ரஷ்ய அதிபர் புடின் கையெழுத்திட்டார். இதை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்ததால் போராட்டக்காரர்கள் மீது தடியடி மற்றும் பல்வேறு தடுப்பு முறைகளை ரஷ்ய காவல்துறை கையாண்டு வருகிறது.

இந்நிலையில் ரஷ்யாவில் மனித உரிமை மீறப்படுவதால், ரஷ்யாவை கண்காணிக்க சிறப்பு நிபுணரை மனித உரிமை ஆணையம் நியமிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை ஹங்கேரியாவை தவிர்த்து அனைத்து ஐரோப்பிய யூனியன் நாடுகளும் ஐ.நா.விடம் சமர்ப்பித்துள்ளன.

இதையடுத்து தீர்மானத்திற்காக நேற்று நடந்த பொது வாக்கெடுப்பில் பெரும்பாலான நாடுகள் தீர்மானத்திற்கு  ஆதரவளித்ததால், ரஷ்யாவை கண்காணிக்க நிபுணரை நியமிக்கும் தீர்மானத்தை ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் வெற்றிகரமாக நிறைவேற்றியது.