மறைந்த ராணி எலிசபெத்தின் உலகின் மிகப்பெரிய உருவப்படத்தை ஆகாயத்தில் வரைந்த விமானி

Prasu
1 year ago
மறைந்த ராணி எலிசபெத்தின் உலகின் மிகப்பெரிய உருவப்படத்தை ஆகாயத்தில் வரைந்த விமானி

செப்டெம்பர் 8 திகதி உயிரிழந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் நினைவாக, 400 கிலோமீற்றருக்கும் அதிகமான பரப்பளவில், ஆகாயத்தில் ஒரு விமான பாதையை உருவாக்கி, அதனை ட்ராக் செய்து பார்த்தால் ராணியின் உருவம் தெரிவதுபோல் விமானத்தை இயக்கி, உலகின் மிகப்பெரிய ராணியின் உருவப்படத்தை வரைந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதனை விமானி அமல் லார்லிட் அக்டோபர் 6ஆம் திகதி நிகழ்த்தியுள்ளார். மேலும், இந்த தனித்துவமான விமான பாதை படத்தை உலகளாவிய விமான கண்காணிப்பு சேவையான Flightradar24 ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.

சுமார் 2 மணி நேரம் பயணித்த விமானம் 413 கிலோமீட்டர்களை கடந்து, லண்டனின் வடமேற்கே 105 கிலோமீட்டர் உயரமும் 63 கிலோமீட்டர் அகலமும் கொண்ட உருவப்படத்தை உருவாக்கியுள்ளார்.இதனை நிகழ்த்துவதற்கு முன் ForeFlight-உடன் இணைந்து சரியான திட்டிடால்கோ செய்ததாக விமானி அமல் கூறினார்.மேலும், மிகப்பெரிய வரைபடத்தை ஆகாயத்தில் வரைந்ததன் மூலம் பணம் திரட்டி Hospice UK எனும் தொண்டு நிறுவனத்திற்கு உதவுவதாகவும் அவர் கூறினார்.

பிரித்தானியாவின் ராணியாக நீண்ட காலம் பதவி வகித்த ராணி எலிசபெத் செப்டம்பர் 8ஆம் திகதி பால்மோரல் கோட்டையில் காலமானார்.மேலும், அவரது அரச இறுதிச்சடங்குகள் செப்டம்பர் 9ஆம் திகதி நடந்து முடிந்தது.