முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்ட்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு வெளிநாடு செல்ல தடை
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்ட்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவரின் கடவுசீட்டுக்களையும் கையகப்படுத்துமாறும், வெளிநாட்டு பயணங்களுக்கு தடைவிதித்தும் கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2010 ஆம் ஆண்டு, சதொச பணியாளர்களை அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தி, 59 இலட்சம் ரூபாய்க்கு அதிகமாக அரசாங்கத்திற்கு பண இழப்பை ஏற்படுத்தியமைக்காக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்ட்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்ட்டன் பெர்னாண்டோ, சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ, மற்றும் முன்னாள் பணிப்பாளர் மொஹமட் சாகீர் ஆகியோருக்கு எதிராகவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், தலா ஒவ்வொருவரையும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் தலா ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீரப்பிணைகளிலும் செல்வதற்கு மேல் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.