40 லட்சம் ஆண்டுகள் பழமையான நெபுலா- புகைப்படம் வெளியிட்ட நாசா

Prasu
2 years ago
40 லட்சம் ஆண்டுகள் பழமையான நெபுலா- புகைப்படம் வெளியிட்ட நாசா

விண்ணில் ஏராளமான அதிசயங்களும், மர்மங்களும் உள்ளன. அந்த மர்மங்களை கண்டறிய உலக நாடுகள் பல செயற்கை கோள்களையும், தொலை நோக்கிகளையும் அனுப்பி அரிய தகவல்களை பெற்று வருகின்றன. 

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் கடந்த 1990-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந் தேதி ஹப்பின் தொலை நோக்கியை விண்ணில் நிலை நிறுத்தியது. 

இந்த அதிநவீன தொலைநோக்கி பல அரிய புகைப்படங்களை அனுப்பி வருகிறது. தற்போது பூமியில் இருந்து 7100 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள பபுள் நெபுலாவை, நாசாவின் ஹப்பின் தொலைநோக்கி புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. 

விண்மீன்கள் கூட்டத்துக்குள் உள்ள அந்த 'பபுள் நெபுலா' கண் கவரும் வகையில் மிகவும் வண்ணமயமாக காணப்படுகிறது. 

நெபுலாக்கள் என்பது விண்வெளியில் காணப்படும் நட்சத்திரங்கள், தூசி மற்றும் ஹைட்ரஜன், ஹீலியம் போன்ற வாயுக்களால் உருவாகும் பெரிய மேகத்தை குறிக்கும். 

இந்த பபுள் நெபுலா வாயுக்களால் ஆன மிகப்பெரிய குமிழால் அல்லது மேகத்தால் மூடப் பட்டுள்ளது. இந்த பபுள் நெபுலா மற்ற நெபுலாக்களை விட மிகவும் பிரபலமானது. 

இது 40 லட்சம் ஆண்டுகள் பழமையானது. இது இன்னும் 1 முதல் 2 கோடி ஆண்டுகளுக்குள் 'சூப்பர் நோவா' வாக மாறிவிடும் என்று நாசா தெரிவித்துள்ளது. 

மேலும், பபுள் நோவா 7 ஒளி ஆண்டுகள் சுற்றளவுக்கு மிகவும் பிரமாண்டமான அளவில் உள்ளது. விண்மீன்கள் வெடித்து சிதறும் நிகழ்வே சூப்பர் நோவா என்று அழைக்கப்படுகிறது. 

அப்போது சூரியனை போன்ற பல மடங்கு சக்தியை அது வெளியிடும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். 

இந்த படத்தை வெளியிட்ட பிறகு நாசா கூறியதாவது:- இந்த பபுள் நெபுலா தெளிவாக பார்க்கும் வகையில் உள்ளது. 

பச்சை நிறத்தில் ஹைட்ரஜன், நீல நிறத்தில் ஆக்சிஜன், சிவப்பு நிறத்தில் நைட்ரஜன் கலந்து வண்ண மயமாக காணப்படுகிறது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!