அமெரிக்காவில் இரவு விடுதியில் துப்பாக்கி சூடு- ஒருவர் உயிரிழப்பு
#America
#GunShoot
#Death
Prasu
2 years ago

அமெரிக்காவில் சமீபகாலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
புளோரிடா மாகாணம் தம்பா என்ற இடத்தில் இரவு விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதிக்கு வந்த மர்ம மனிதன் தான் கையில் வைத்து இருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான்.
இதில் குண்டு காயம் அடைந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தனர். உடனே அந்த மர்ம மனிதன் வாகனத்தில் ஏறி தப்பி சென்று விட்டான்.
இந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் இறந்தார். 2 பெண்கள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தார். போலீசார் அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம மனிதன் எதற்காக இந்த செயலில் ஈடுபட்டான் என தெரியவில்லை. அவனை போலீசார் தேடி வருகின்றனர்.



