ஈரான் போராட்டத்தில் 19 குழந்தைகள் இறந்துள்ளனர்- மனித உரிமை குழு அதிர்ச்சி தகவல்
#Iran
#Protest
Prasu
2 years ago
ஈரானில் ஹிஜாப் உடைக்கு எதிராக நாடு முழுவதும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் 17-ந்தேதி மாஷா அமினி என்ற 22 வயது இளம் பெண் இறந்த பிறகு போராட்டம் வலுவடைந்து உள்ளது.
பல்வேறு நகரங்களில் நடந்து வரும் போராட்டங்களால் அந்நாடு திக்குமுக்காடி வருகிறது.
போலீசார்-போரட்டக்காரர்கள் இடையே நடந்த மோதலில் இது வரை 185 பேர் பலியாகி விட்டதாகவும். இதில் 19 பேர் குழந்தைகள் என்றும் ஈரான் மனித உரிமை குழு தெரிவித்து உள்ளது. ஆனால் இதனை ஈரான் அதிகாரிகள் மறுத்து உள்ளனர்.