மெக்ஸிகோவில் அடுத்தடுத்து சுருண்டு விழுந்த 60 மாணவர்கள்-பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி

Prasu
2 years ago
மெக்ஸிகோவில் அடுத்தடுத்து சுருண்டு விழுந்த 60 மாணவர்கள்-பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி

மெக்ஸிகோவில் பள்ளி மாணவர்களுக்கு விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மெக்ஸிகோ நாட்டின் சியாபாஸில் உள்ள பள்ளி ஒன்றில், கடந்த வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம் உடனடியாக மாணவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றது.

அங்கு மயங்கி விழுந்த 60 மாணவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், அனைவருக்கும் விஷம் கொடுக்கப்பட்டுள்ளது எனக் கூறி அதிர்ச்சியளித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர், பள்ளி நிர்வாகத்தின் மீது கோபத்தை வெளிப்படுத்தினர்.

மாணவர்களுக்கு எப்படி விஷம் கொடுக்கப்பட்டது என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. எனினும், இந்த சம்பவத்தின் பின்னணியில் போதைப்பொருள் கும்பல் இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதற்கிடையில் அசுத்தமான தண்ணீர் அல்லது Food poison காரணமாக இவ்வாறு நடந்திருக்கலாம் என உள்ளூர் செய்தி நிறுவனங்கள் கூறியுள்ளதை பெற்றோர்கள் நம்புவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து சியாபாஸ் மாகாண பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!