அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 12.10.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 12.10.2022

மேஷம்
அசுவினி : வியாபாரத்தில் முயற்சிகள் பலன் தராமல் போகும். சிந்தித்து செயல்படுவதால் இழப்புகளை தவிர்க்கலாம்.
பரணி : எதிர்பார்ப்பு தாமதமாகும். உங்கள் பணியில் மட்டும் முழுமையாக கவனம் செலுத்துவது நன்மையாகும்.
கார்த்திகை 1 : பணிபுரியும் இடத்தில் மறைமுக தொல்லைகளை சந்திப்பீர்கள். செயல்களில் கவனம் தேவை.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4 : வேலை பளு அதிகரிக்கும். திடீர் செலவுகளால் சங்கடம் அதிகரிக்கும்.
ரோகிணி : கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. அரசு வழியில் சங்கடம் தோன்றும்.
மிருகசீரிடம் 1, 2 : அலைச்சல் அதிகரிக்கும். முயற்சியில் இழுபறி நிலை உண்டாகும்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4 : பழைய கடன்களை அடைப்பீர்கள். அதனால் நிம்மதி காண்பீர்கள்.
திருவாதிரை : புதிய முயற்சி ஒன்று வெற்றியாகும். நீண்டநாள் எண்ணம் நிறைவேறும்.
புனர்பூசம் 1, 2, 3 : புதிய வாகனம் வாங்குவீர்கள். பணி புரியும் இடத்தில் செல்வாக்கு உயரும்.

கடகம்
புனர்பூசம் 4 : தொழிலை விரிவு செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உங்கள் எண்ணம் நிறைவேறும்.
பூசம் : வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறையால் புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள்.
ஆயில்யம் : கடவுள் வழிபாட்டில் மனம் செல்லும். நேற்றைய எண்ணம் ஒன்று நிறைவேறும்.

சிம்மம்
மகம் : குடும்பத்தினரின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். புதிய நண்பர்களால் அனுகூலம் அடைவீர்கள்.
பூரம் : பொன் பொருள் சேர்க்கை உண்டு. புதிய முயற்சி இன்று நிறைவேறும்.
உத்திரம் 1 : உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த மாற்றத்தை அடைவீர்கள். உயரதிகாரிகளின் ஆதரவு உண்டாகும்.

கன்னி
உத்திரம் 2, 3, 4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சிகள் இன்று வேண்டாம்.
அஸ்தம்: எதிர்பார்ப்புகளில் தடை, தாமதம் ஏற்படும். மனதில் இனம்புரியாத சங்கடம் தோன்றும்.
சித்திரை 1, 2: செயல்களில் இடையூறுகளை சந்திப்பீர்கள். குடும்பத்தில் குழப்பம் உண்டாகும்.

துலாம்
சித்திரை 3, 4 : உங்கள் எண்ணம் எளிதில் நிறைவேறும்.லாபம் அதிகரிக்கும்.
சுவாதி : உங்கள் திறமை வெளிப்படும். நினைத்ததை இன்று அடைவீர்கள்.
விசாகம் 1, 2, 3 : விலகிச் சென்றவர் உங்களைத் தேடி வருவார்கள். தம்பதிகளுக்குள் ஒற்றுமை உண்டாகும்

விருச்சிகம்
விசாகம் 4 : நீண்டநாள் முயற்சி ஒன்று எளிதாக நிறைவேறும். போட்டியாளர்கள் விலகுவார்கள்.
அனுஷம் : அலுவலகத்தில் பொறுப்புகள் கூடும். உங்கள் செல்வாக்கு உயரும்.
கேட்டை : நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். புதிய முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர்கள்.

தனுசு
மூலம் : உறவினர்கள் வழியில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும்
பூராடம் : எதிர்காலத்திற்குரிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். சேமிப்பில் கவனம் செல்லும்.
உத்திராடம் 1 : புதிய சொத்து வாங்கும் முயற்சி நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4 : தொழிலில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். வருமானம் அதிகரிக்கும்.
திருவோணம் : உழைப்பிற்கேற்ற வருவாய் உண்டாகும். எதிர்ப்புகளை சமாளித்து வெல்வீர்கள்.
அவிட்டம் 1, 2 : நீங்கள் ஈடுபடும் முயற்சி ஒன்று இழுபறிக்குப் பின் நிறைவேறும். பொது இடங்களில் உங்கள் திறமை வெளிப்படும்.

கும்பம்
அவிட்டம் 3, 4 : வியாபாரத்தில் இருந்த தடைகளை சரி செய்வீர்கள். உங்கள் முயற்சி லாபத்தை உண்டாக்கும்.
சதயம் : துணிச்சலுடன் செயல்பட்டு நீங்கள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3 : குடும்பத்தினரின் நலனுக்காக ஒரு முயற்சி மேற்கொள்வீர்கள். அரசு வழியில் ஆதாயம் உண்டாகும்.

மீனம்
பூரட்டாதி 4 : குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பண வரவில் இருந்த தடை அகலும்.
உத்திரட்டாதி : வேலையிடத்தில் பொறுப்பு அதிகரிக்கும். உங்கள் திறமைக்கு மதிப்பு உண்டாகும்.
ரேவதி : எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும். விலகிச்சென்ற உறவினர்கள் விரும்பி வருவார்கள்.