பொருட்களின் விலை உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லண்டன் மக்கள்

Prasu
2 years ago
பொருட்களின் விலை உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லண்டன் மக்கள்

உக்ரைன்  மீது ரஷியா கடந்த 8  மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைனில்  இருந்து லட்சக்கணக்கான மக்கள அகதிகளாக பல நாடுகளை நோக்கி படையெடுக்க தொடங்கினர். 

இதனால்  ரஷியா மீது சர்வதேச நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடையால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதனால் ஐரோப்பிய நாடுகளில்  பெட்ரோல்  பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

தற்போது இங்கிலாந்தில் பெட்ரோல்  உள்ளிட்ட பல  பொருட்களின் விலை 2 மடங்காக அதிகரித்துள்ளது. இதனால்  நாட்டு மக்கள் நாட்டின் முக்கிய நகரங்களில் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

அதேபோல் லண்டன் நகரில் உள்ள கிங்ஸ்  சதுக்கத்தில் நேற்று நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை காவல்துறையினர் தடுக்க முயன்றனர். 

இதனால் ஆத்திரமடைந்த மக்கள் விலை உயர்வை கட்டுப்படுத்துங்கள். மக்களை இல்லை என கூறி கோஷம் எழுப்பியுள்ளனர். 

இதுகுறித்து பொருளாதார நிபுணர்கள் கூறியதாவது. எரிசக்தி விலை உயர்வை சமாளிப்பதற்கான திட்டங்களை இங்கிலாந்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள லிஸ் டிரஸ் அறிவித்துள்ளார். ஆனால் இந்த சூழலில் அது போதுமானதாக இருக்காது என கூறியுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!