அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 13.10.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 13.10.2022

மேஷம்
அசுவினி : கவனமுடன் செயல்படுவீர்கள். முயற்சிகள் வெற்றியாகும். பணவரவு அதிகரிக்கும்.
பரணி: குடும்பத்தினர் ஒத்துழைப்புடன் ஒரு முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள்.
கார்த்திகை 1 : வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கல் தீரும். எதிர்பார்த்த வரவு வந்து சேரும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4 : உங்கள் எண்ணம்போல் செயல்படுவீர்கள். நேற்றைய முயற்சி நிறைவேறும்.
ரோகிணி : எதிர்பார்த்த தகவல் இன்று வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.
மிருகசீரிடம் 1, 2: உங்கள் முயற்சியில் இருந்து வந்த தடை விலகும். வருமானம் அதிகரிக்கும்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4 : பணியிடங்களில் பொறுமையுடன் செயல்பட்டதால் பொறுப்பான பதவி தேடி வரும்.
திருவாதிரை : குடும்பத்தினர் ஆசையை நிறைவேற்றுவீர்கள். ஒரு சிலர் கடவுள் வழிபாட்டில் ஈடுபடுவீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3 : அலைச்சல், செலவு அதிகரிக்கும். ஆதலால் ஆதாயம் உண்டு.

கடகம்
புனர்பூசம் 4 : வருமானத்தில் இருந்து வந்த தடை விலகும். கூடுதல் வருமானம் பெற யோசிப்பீர்கள்.
பூசம் : உங்கள் முயற்சி லாபமாகும். பொது இடங்களில் செல்வாக்கு உயரும்.
ஆயில்யம் : நட்பு வட்டம் விரிவடையும். புதிய நண்பர்களால் லாபம் காண்பீர்கள்

சிம்மம்
மகம் : பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.
பூரம் : குடும்பத்துடன் கோயிலுக்கு சென்று வருவீர்கள். நிதிநிலை உயரும். லாபகரமான நாள்.
உத்திரம் 1 : தொழிலில் இருந்து வந்த தடைகள் விலகும். உங்கள் செயல் ஆதாயத்தை உண்டாக்கும்.

கன்னி
உத்திரம் 2, 3, 4 : தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முயற்சி ஒன்றில் முன்னேற்றம் காண்பீர்கள்.
அஸ்தம் : குடும்பத்தில் ஒருவரின் உடநலனில் தீவிரம் காட்டுவீர்கள். பொறுமை தேவை.
சித்திரை 1, 2 : தீராமல் இருந்த ஒரு பிரச்னை நண்பர்களின் உதவியுடன் முடிவிற்கு வரும்.

துலாம்
சித்திரை 3, 4 : ஆர்வமுடன் நீங்கள் ஈடுபட்ட முயற்சி இழுபறியாகும். குழப்பம் அதிகரிக்கும்.
சுவாதி : மனதில் சங்கடம் ஏற்பட்டு மறையும். அமைதி காப்பது நன்மையாகும்.
விசாகம் 1, 2, 3 : உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். இனம் புரியாத குழப்பத்திற்கு ஏற்படும்.

விருச்சிகம்
விசாகம் 4 : நண்பர்கள் ஒத்துழைப்புடன் ஒரு செயலை இனிதே செய்து முடிப்பீர்கள்.
அனுஷம் : திருமண வயதினருக்கு வரன் குறித்த தகவல் வீடு தேடி வரும்.
கேட்டை : கூட்டுத்தொழில் முயற்சி லாபம் அதிகரிக்கும். உங்கள் ஆலோசனையை மற்றவர்கள் ஏற்பார்கள்.

தனுசு
மூலம் : உங்கள் திறமை வெளிப்படும். நினைத்த செயலை செய்து முடிப்பீர்கள்.
பூராடம் : கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
உத்திராடம் 1 : எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர். பெரியோர்களின் ஆசியை பெறுவீர்கள்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4 : குடும்பத்தில் உள்ளவர்களின் முயற்சியால் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.
திருவோணம் : பிள்ளைகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும். சேமிப்பில் கட்டாயம் ஈடுபடுவீர்கள்.
அவிட்டம் 1, 2 : பணியாளர்களுக்கு மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.

கும்பம்
அவிட்டம் 3, 4 : திட்டமிடாமல் ஒரு செயலில் ஈடுபட்டு சங்கடத்தை அனுபவிப்பீர்கள்.
சதயம் : செயலில் தடுமாற்றம் ஏற்படும். கவனக்குறைவால் மனவுளைச்சலுக்கு ஆளாவீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3 : உறவினர் ஒருவரால் குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். வார்த்தைகளில் கவனம் தேவை.

மீனம்
பூரட்டாதி 4 : இருப்பிடத்தை மாற்றம் செய்ய நினைப்பீர்கள். உங்கள் எண்ணம் நிறைவேறும்.
உத்திரட்டாதி : துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ரேவதி : இழுபறியாக இருந்த ஒரு வேலை முடிவிற்கு வரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.