பொருளாதாரத்தைப் போன்றே காலநிலை மாற்றம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் – ஜனாதிபதி

Mayoorikka
2 years ago
பொருளாதாரத்தைப் போன்றே காலநிலை மாற்றம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் – ஜனாதிபதி

பொருளாதாரம் தொடர்பில் கவனம் செலுத்துவது போன்று காலநிலை மாற்றம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றம் தொடர்பான நேர்காணலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “பொருளாதார நெருக்கடியைப் பார்க்கும்போது, ​​நாம் நிச்சயமாக காலநிலை மாற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

ஏனெனில் இன்றைய பொருளாதாரமும் பருவநிலை மாற்றமும் பின்னிப் பிணைந்துள்ளது. இந்த நிலையில் இருந்து நாம் மீள வேண்டும். மேலும் பொருளாதார வளர்ச்சியும் இருக்க வேண்டும்.

நமது பொருளாதாரம் இப்போது பசுமைப் பொருளாதாரத்திற்கு இணங்க வேண்டும். அதைத்தான் உலகம் இன்று நோக்கிச் செல்கிறது. அதிலிருந்து நாம் விலக முடியாது.

இரண்டாவதாக, பசுமைப் பொருளாதாரத்தில் இலங்கை தனது உயர் ஆற்றலைப் பயன்படுத்த முடியும்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உட்பட பல துறைகளில் பசுமைப் பொருளாதாரத்தின் மூலம் இலங்கை பயனடைய முடியும். நாம் அந்த வழியில் செல்ல வேண்டும்” என அவர் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!