எதிர்வரும் மாதங்களில் எந்தத் தேர்தலும் இல்லை – வஜிர அபேவர்தன
Mayoorikka
2 years ago
நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கான தேசிய கொள்கை கட்டமைப்பை வகுத்த பின்னர் தேர்தல் நடத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
எனவே எதிர்வரும் மாதங்களில் எந்தத் தேர்தலையும் நடத்துவதற்கு வாய்ப்பில்லை என அவர் தெரிவித்தார்.
“இது தேர்தலை நடத்துவதற்கான நேரம் அல்ல. தேர்தலுக்கு அழைப்பு விடுப்பவர்கள் நாட்டை சீர்குலைக்க விரும்புபவர்கள். தேசத்தை சீர்குலைக்க நினைக்கும் இந்த சக்திகள் விரைவில் ஓரங்கட்டப்படுவர்” என்று அவர் கூறினார்.
“உள்ளூராட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை தற்போதைய 8000ல் இருந்து 4000 ஆகக் குறைப்பதும், ஆட்சியின் அனைத்து அடுக்குகளிலும் உள்ள விருப்பு வாக்கு முறையை இல்லாதொழிப்பதும் அவசியம்.
விவேகமுள்ள எவரும் இதை எதிர்ப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.