கட்டிடம் ஒன்றின் மாடியில் இருந்து சடலம் ஒன்று இன்று மீட்பு
Kanimoli
2 years ago

கட்டடம் ஒன்றின் மாடியில் இருந்து சடலம் ஒன்று இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் யாழ் வைத்தியசாலை வீதியில் இடம் பெற்றுள்ளது.
குறித்த நபர் கட்டடத்தில் நிர்மான வேலையில் பணியாற்றும் திருநெல்வேலியை சேர்ந்த 32 வயதுடைய நபர் என தெரிய வந்துள்ளது.
யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்று இரவு மதுபான விருந்து ஒன்றில் கலந்துவிட்டு வந்த நபரே மேற்படி உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விடுதியில் பணிபுரியும் 10 பணியாளர்களை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



