தீவிரமடையும் போர் 40க்கும் மேற்பட்ட நகரங்களில் ஏவுகணை தாக்குதல்

Kanimoli
2 years ago
தீவிரமடையும் போர் 40க்கும் மேற்பட்ட நகரங்களில் ஏவுகணை தாக்குதல்

தமது நாட்டின் 40க்கும் மேற்பட்ட நகரங்கள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் போரை ஆரம்பித்த நிலையில் 8 மாதங்கள் கடந்த நிலையில் போர் தொடர்கின்றது.

இதனிடையே, போரில் உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமித்த லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய 4 பிராந்தியங்களை தன்னுடன் இணைத்து கொள்வதாக அறிவித்த ரஷ்யா இது தொடர்பாக பொது வாக்கெடுப்பை நடத்தியது.

இதன் பின்னர் இந்த பொது வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக கூறி அந்த 4 பிராந்தியங்களையும், தன்னுடன் இணைத்து கொண்டது. ஆனால் சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என உலக நாடுகள் இதனை கண்டித்துள்ளன.

இந்த நிலையில் உக்ரைனின் 4 பிராந்தியங்களை ரஷ்யா இணைத்ததை கண்டித்து ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில் 40-க்கும் மேற்பட்ட நகரங்கள் மீது இன்று ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் உக்ரைன் விமானப்படையால் 25 ரஷ்ய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!