உலக வங்கியின் தெற்காசியாவிற்கான பிரதித்தலைவருக்கும் இலங்கை பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு!

Mayoorikka
2 years ago
உலக வங்கியின் தெற்காசியாவிற்கான பிரதித்தலைவருக்கும் இலங்கை பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு!

அமெரிக்கா சென்றுள்ள நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க ஆகியோர் உலக வங்கியின் தெற்காசியாவிற்கான பிரதித்தலைவர் மார்ட்டின் ரைஸரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதனை மார்ட்டின் ரைஸர் ட்விட்டர் பதிவொன்றினூடாக தெரிவித்துள்ளார்.

இதன்போது, உலக வங்கி எவ்வாறு பொருளாதார உறுதிப்படுத்தல் மற்றும் மீட்சிக்கான ஆழமான கட்டமைப்பு சீர்திருத்தங்களை ஆதரிக்க முடியும் என்பது பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!