1,500 கோடி ரூபாய் மோசடி செய்த சீன தம்பதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
ஸ்போர்ட்ஸ் செயின் என்ற கணினி மென்பொருளை அறிமுகப்படுத்தி பிரமிட் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்து 1,500 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக கூறப்படும் சீன தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நேற்று இரவு மலேசியா செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் காத்திருந்த போது குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் நேற்று கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெல முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, சந்தேகநபர்களை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
35 மற்றும் 25 வயதுடைய சந்தேகநபர்கள் கொழும்பு பஹா பிரதேசத்தில் தற்காலிகமாக வசிப்பவர்கள் என தெரியவந்துள்ளது.