பிரித்தானியாவில் 1.2 மில்லியன் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ள நிலையில் புலம்பெயர்ந்தோரைக் கொண்டு நிரப்ப முடிவு

Kanimoli
2 years ago
பிரித்தானியாவில் 1.2 மில்லியன் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ள நிலையில் புலம்பெயர்ந்தோரைக் கொண்டு நிரப்ப முடிவு

பிரித்தானியாவில் வரலாறு காணாத அளவில் 1.2 மில்லியன் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ள நிலையில், அவற்றை புலம்பெயர்ந்தோரைக் கொண்டு நிரப்ப அமைச்சர் ஒருவர் அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதேவேளை, பணி மற்றும் ஓய்வூதியங்களுக்கான செயலரான சோலி ஸ்மித் (Chloe Smith) திறன்மிகு வெளிநாட்டுப்பணியாளர்களைக் கொண்டு பிரித்தானியாவில் காணப்படும் பணியிடங்களை நிரப்ப பரிந்துரை செய்துள்ளார்.

எனினும், பெரும்பாலான பணியிடங்களை நிரப்ப பிரித்தானியர்களுக்கு முன்னுரிமை கொடுக்க விரும்புவதாக சோலி ஸ்மித் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், பிரித்தானியாவில் அதிகரித்துவரும் புலம்பெயர்தல் குறித்த விவாதம் ஒன்று எழுந்தது.

இந்நிலையில், பிரித்தானிய உள்துறைச் செயலரான சுவெல்லா பிரேவர்மேன், மொத்தத்தில் பிரித்தானியாவுக்கு புலம்பெயர்பவர்களின் எண்ணிக்கையையே குறைக்க விரும்புவதாக தெரிவித்திருந்தார்.

அதே கருத்தை ஆமோதிக்கும் விதமாக, இந்த நாட்டில் வாழும் பிரித்தானியர்களுக்கு பணிகள் வழங்குவதில் முன்னுரிமை வழங்குவது சரியானதுதான் என்று கூறியுள்ள ஓய்வூதியங்களுக்கான செயலரான சோலி ஸ்மித், அதே நேரத்தில், கொஞ்சம் புலம்பெயர்ந்தோருக்கும் அதில் பங்களிப்பு கொடுக்கவேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.  

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!