ரஷ்ய எல்லையில் உள்ள வெடிமருந்து கிடங்கை குண்டுவீசி தகர்த்திய உக்ரைன்

#Ukraine #Attack #Russia
Prasu
2 years ago
ரஷ்ய எல்லையில் உள்ள வெடிமருந்து கிடங்கை குண்டுவீசி தகர்த்திய உக்ரைன்

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. தொடக்கத்தில் உக்ரைனின் அனைத்து நகரங்கள் மீதும் தாக்குதல் நடத்தியது. சில மாதங்களுக்கு பிறகு கிழக்கு உக்ரைன் பகுதிகளை குறிவைத்து கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. 

உக்ரைன் தலைநகர் கிவ் உள்ளிட்ட சில நகரங்களில் தாக்குதல்களை ரஷியா குறைத்தது. இதற்கிடையே ரஷியாவின் கிரிமியா தீபகற்பத்தில் உள்ள பாலத்தில் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டதால் ஆத்திரம் அடைந்த ரஷியா ஆவேச தாக்குதலில் ஈடுபட்டது. 

உக்ரைன் தலைநகர் கிவ்வில் ஒரே நாளில் 84 ஏவுகணைகள் வீசப்பட்டன. நேற்று உக்ரைனில் 40க்கும் மேற்பட்ட நகரங்கள் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தினர். 

இதனால் போர் களத்தில் மீண்டும் தாக்குதல் அதிகரித்து இருக்கிறது. இந்தநிலையில் ரஷியாவின் ஆயுத கிடங்கு மீது உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. 

உக்ரைன்-ரஷியா எல்லைப் பகுதியான பெல் கோரட் பிராந்தியத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ரஷியாவின் வெடி மருந்து கிடங்கு ஒன்று உள்ளது. 

இந்த ஆயுத கிடங்கு மீது உக்ரைன் படையினர் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ஆயுத கிடங்கு முற்றிலும் சேதமடைந்தது. 

இதுகுறித்து பெல்கோரப் பிராந்தியத்தின் கவர்னர் வியாசெஸ்லாங் கிளாட் சோவ் கூறும் போது, பெல்கோரட் மாவட்டத்தில் உள்ள வெடி மருந்து கிடங்கு உக்ரைன் படையின் தாக்கு தலில் வெடித்து சிதறியது. 

அப்பகுதியில் இருந்த மக்கள் பாது காப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர் என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!