பிரித்தானியாவில் 10,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் அஞ்சல் நிறுவனம்

Prasu
1 year ago
பிரித்தானியாவில் 10,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் அஞ்சல் நிறுவனம்

பிரித்தானியாவில் எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்திற்குள் 10,000 பேரை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக றோயல் மெய்ல் அறிவித்துள்ளது.

ஊழியர்களால் நடத்தப்படும் வேலைநிறுத்த நடவடிக்கை மற்றும் பல்வேறு விடயங்களை அடிப்படையாக கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கம் கொண்ட அதன் திட்டத்தைப் பற்றி தொழிலாளர்களுக்கு அறிவிக்கத் தொடங்கியுள்ளதாக அஞ்சல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலான ஆட்குறைப்புகள் பணிநீக்கம் மூலம் செய்யப்படும். மேலும் பணியை விட்டு வெளியேறுபவர்களின் இடத்தை புதியவர்கள் கொண்டு நிறப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படாதென குறிப்பிடப்படுகின்றது.

றோயல் மெய்ல் அதன் முழு ஆண்டு இழப்பு 350 மில்லியன் பவுண்டுகளை எட்டும் என்று எதிர்பார்க்கிறது.

றோயல் மெய்லின் தலைமை நிர்வாகி சைமன் தாம்சன் இதுகுறித்து கூறுகையில், ‘இது மிகவும் சோகமான நாள். இந்த வேலை இழப்புகளை நாங்கள் அறிவிப்பதில் வருந்துகிறேன்.

கட்டாய பணிநீக்கங்களைத் தவிர்க்கவும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆதரவளிக்கவும் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என கூறினார்.

றோயல் மெய்ல் நிறுவனத்தில் தற்போது 140,000 பேர் பணிபுரிகின்றமை குறிப்பிடத்தக்கது.