அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 15.10.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 15.10.2022

மேஷம்
அசுவினி : புதிய முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் வருமானம் அதிகரிக்கும்.
பரணி : திட்டமிட்டு செயல்படுவீர். நினைத்ததை சாதிப்பீர். எதிரிகள் மனம் திருந்துவர்.
கார்த்திகை 1 : வெளிவட்டாரத்தில் மரியாதை கூடும். பொருளாதாரத்தில் உள்ள நெருக்கடி குறையும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4 : மதியம் வரை குழப்பம் நீடித்தாலும் அதன்பின் உங்கள் முயற்சி பலித்தமாகும்.
ரோகிணி : எதிர்பார்த்த பணம் மதியத்திற்கு மேல் வரும். வீட்டுப் பொருளாதாரத்தில் நிறைவு காண்பீர்கள்.
மிருகசீரிடம் 1, 2 : சங்கடங்களை எல்லாம் சமாளித்து நினைத்ததை அடைவீர்கள். முயற்சி வெற்றியாகும்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4 : மதியம் வரை அலைச்சலும், செலவும் அதிகரிக்கும். அதனால் அனுகூலம் ஏற்படும்.
திருவாதிரை : செயலில் கவனம் செலுத்துவீர்கள். நேற்று நினைத்த விருப்பம் இன்று நிறைவேறும்.
புனர்பூசம் 1, 2, 3 : விழிப்புடன் செயல்பட்டு உங்கள் செயலில் முன்னேற்றம் வெற்றி காண்பீர்கள்.

கடகம்
புனர்பூசம் 4 : மதியத்திற்குள் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வெளியூர் கோயிலுக்கு செல்வீர்கள்.
பூசம் : வரவேண்டிய பணம் கைக்கு வரும். மதியத்திற்கு மேல் அலைச்சல் அதிகரிக்கும்
ஆயில்யம் : சுறு,சுறுப்புடன் தொழிலில் செயல்படுவீர்கள். நிதிநிலை சீராகும்.

சிம்மம்
மகம் : தடைபட்டிருந்த பணம் வந்து சேரும். நேற்றைய கடனை இன்று அடைப்பீர்கள்.
பூரம் : தொழிலில் இருந்த தடை அகலும். நண்பர்களால் நன்மை அதிகரிக்கும் நாள்.
உத்திரம் 1 : இன்று வியாபாரத்தில் திட்டமிட்டு செயல்படுவீர்கள். குடும்பத்தின் நிதிநிலை உயரும்.

கன்னி
உத்திரம் 2, 3, 4 : நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். வியாபாரத்தில் நிதிநிலை அதிகரிக்கும்.
அஸ்தம் : பணிபுரியும் இடத்தில் கோரிக்கைகளை செயல்படுத்த முயற்சிப்பீர்கள். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
சித்திரை 1, 2 : தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உறவினர் ஒருவரின் ஆதரவால் நன்மை ஏற்படும்.

துலாம்
சித்திரை 3, 4 : நேற்று முன்தினத்தில் இருந்து வந்த நெருக்கடி மதியத்திற்கு மேல் விலகும்.
சுவாதி : செயல்களில் இருந்து வந்த தடை அகலும். ஒரு முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள்.
விசாகம் 1, 2, 3 : தடைகளைத் தாண்டி நினைத்ததை சாதிப்பீர்கள். எதிர்பார்த்த தகவல் வீடு தேடி வரும்.

விருச்சிகம்
விசாகம் 4 : மதியம் வரை செயல்களில் சாதகமான நிலையை காண்பீர்கள். அதன்பின் தடை தோன்றி மறையும்.
அனுஷம்: மதியத்திற்கு மேல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் உங்கள் செயல்களில் கவனம் தேவை.
கேட்டை : செயல்களில் சாதகங்களை அடைந்தாலும் அதன்பின் சங்கடங்களை சந்திப்பீர்கள்.

தனுசு
மூலம் : துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். வழக்கு ஒன்று உங்களுக்கு சாதகமாகும்.
பூராடம் : எதிரிகளால் ஏற்பட்ட தொல்லை விலகும். முயற்சி ஒன்று நிறைவேறும்.
உத்திராடம் 1 : நண்பர்களின் உதவியுடன் உங்கள் செயலில் லாபம் காண்பீர்கள். நிதிநிலை உயரும்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4 : அரசு வழியிலான எதிர்பார்ப்பு நிறைவேறும். பகைவர்களின் தொல்லை விலகும்.
திருவோணம் : உத்தியோகத்தில் உங்கள் மீது ஏற்பட்ட பழி விலகும். மறைமுக எதிரியை காண்பீர்கள்.
அவிட்டம் 1, 2 : அரசு வழியில் அனுகூலம் உண்டாகும். வழக்கு உங்களுக்கு சாதகமாகும்.

கும்பம்
அவிட்டம் 3, 4: நேற்றுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
சதயம்: பிள்ளைகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும். புதிய முயற்சி ஒன்று லாபமாகும்.
பூரட்டாதி 1, 2, 3: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். செயல்களில் சாதகமான நிலை உண்டாகும்.

மீனம்
பூரட்டாதி 4 : மதியத்திற்கு மேல் சில நெருக்கடிகளை சந்திப்பீர்கள். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
உத்திரட்டாதி : அரசு வழியிலான முயற்சியில் கவனம் தேவை. மேலதிகாரியின் கண்டிப்புக்கு ஆளாவீர்கள்.
ரேவதி : உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் ஒரு பிரச்னையில் இருந்து மீளுவீர்கள்.