மசூதிக்கு வெளியே பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் தலைமை நீதிபதி
பாகிஸ்தான் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முகமது நூர் மெஸ்கன்சாய் நேற்று பலுசிஸ்தான் மாகாணத்தின் கரண் பகுதியில் உள்ள மசூதிக்கு வெளியே நின்றுகொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் திடீரென அவரை நோக்கி சூப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் பலத்த காயமடைந்த நீதிபதியை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார். நீதிபதி மறைவுக்கு பலுசிஸ்தான் முதல்வர் அப்துல் குத்தூஸ் இரங்கல் தெரிவித்துள்ளா.
மேலும் நீதிபதியின் சேவை மறக்க முடியாதது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற கோழைத்தனமான தாக்குதல்களால் தேசத்தை அச்சுறுத்த முடியாது என்றும் அவர் எச்சரித்தார்.
ஷரியாவுக்கு எதிராக ரிபா அடிப்படையிலான வங்கி முறையை அறிவிக்கும் முக்கிய தீர்ப்பை மெஸ்கன்சாய் வழங்கியது குறிப்பிடத்தக்கது.