வாட்ஸ்அப் பாவனையாளர்களுக்கு இணைய பாதுகாப்பு நிறுவனம் எச்சரிக்கை
Kanimoli
2 years ago
வாட்ஸ்அப் பாவனையாளர்களுக்கு இணைய பாதுகாப்பு நிறுவனம் எச்சரிக்கை தகவலொன்றினை விடுத்துள்ளது.
இதற்கமைய Clone Whatsapp போன்ற செயலிகளை உபயோக படுத்துபவர்களின் தரவுகள் திருடப்படுவதாக ESET என்ற இணைய பாதுகாப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பற்ற செயலிகளை உபயோகிப்பதால் பயனர்களின் கைபேசி பாதிக்கப்படுவதாகவும் அனுமதியின்றி பயனர்களின் கைபேசி உரையாடல்கள், புகைப்படங்கள், காணொளிகள் போன்றவை திருடப்படும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.