குடியேற்றச் செலவினங்களுக்காக மட்டும் இலங்கை அரசாங்கம் 38 பில்லியனுக்கும் அதிகமாக செலவழிக்க வேண்டும்

Kanimoli
2 years ago
குடியேற்றச் செலவினங்களுக்காக மட்டும் இலங்கை அரசாங்கம் 38 பில்லியனுக்கும் அதிகமாக செலவழிக்க வேண்டும்

சீனாவின் ஹார்பர் இன்ஜினியரிங் கோப்பரேசனினால், கொழும்பின் புறநகர் ராஜகிரியவிலிருந்து அதுருகிரிய வரையிலான 9.5 கிலோமீட்டர் நீளமான நெடுஞ்சாலையை நிர்மாணிக்கப்படும்போது, மீள்குடியேற்றச் செலவினங்களுக்காக மட்டும் இலங்கை அரசாங்கம் 38 பில்லியனுக்கும் அதிகமாக செலவழிக்க வேண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதில் நிலங்கள், வீடுகள் மற்றும் மரங்களுக்கான இழப்பீடு, சுய இடமாற்றம் மற்றும் வாடகை தங்குமிடம், பொதுவான சொத்துக்களை மாற்றுதல், வாழ்வாதார மறுசீரமைப்பு மற்றும் மறுவாழ்வு ஆகியவை அடங்கும் என்று திட்டத்தின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

அத்துடன், பாரிய திட்டங்களை அரசாங்கம் முடக்கியுள்ளபோதும், புதிய களனி பாலம் முதல் அதுருகிரிய வரையிலான 16.4 கிலோமீட்டர் முழு நான்கு வழிப்பாதையை சீன நிறுவனத்திற்கு வழங்குவதற்கு,நெடுஞ்சாலைகள் அமைச்சின் மூத்த அதிகாரிகள் வீதி அபிவிருத்தி அதிகாரசபையை தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் மொத்த தொகை இன்னும் வெளியிடப்படவில்லை.

ராஜகிரிய - அதுருகிரிய நெடுஞ்சாலையை நிர்மாணிக்கும்போது, சுமார் 94 ஏக்கர் பகுதி பாதிக்கப்படும். இதன்போது 463 குடும்பங்கள் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் நகர்ப்புற நிலங்கள் மற்றும் நன்கு கட்டமைக்கப்பட்ட குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்கள் இந்த பகுதியில் இருப்பதால் சமூக பொருளாதார மற்றும் மீள்குடியேற்ற செலவு அதிகம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. முன்மொழியப்பட்ட பாதையின் பெரும்பகுதி தனியார் நிலங்களாக உள்ளன.சில அரசாங்கத்துக்கு சொந்தமானவை.

வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டல் மற்றும் பொல்துவ வீதிக்கு மேலாகவும் குறிப்பாக ஹோட்டலுக்கு குறிப்பிடத்தக்க சேதங்கள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுடன் இந்த நெடுஞ்சாலையின் ஒரு பகுதி அமைந்துள்ளது.

கோல்ஃப் மைதானத்தின் ஒரு பகுதியும் இதில் பாதிக்கப்படும். இந்நிலையில் தற்போதுள்ள நீச்சல் குளம் முழுமையாக கையகப்படுத்தப்படும்.

பத்தரமுல்லையில் கணிசமான அளவில் கட்டப்பட்ட குடியிருப்புப் பகுதியை உள்ளடக்கிய இந்த திட்டம், கொஸ்வத்தையில் மாலபே வீதி வழியாகச் செல்கிறது.

இது சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய தலங்கம மற்றும் அவெரிஹேன குளங்கள் மற்றும் நெல் வயல்களின் ஒரு பகுதியையும் கடந்து செல்கிறமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!