தைவான் விவகாரத்தில் ராணுவ நடவடிக்கை உறுதி- சீன அதிபர் ஜி ஜின்பிங் தகவல்
கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்று வரும் சீனாவில் 5 ஆண்டுக்கு ஒருமுறை அக்கட்சியின் தேசிய மாநாடு நடைபெறும். அந்த மாநாடடில் கூட்டத்தில் நாட்டின் அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார். அந்த வகையில் சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது தேசிய மாநாடு இன்று தொடங்கியது.
ஒரு வாரம் நடைபெறும் இந்த மாநாட்டை சீன அதிபரும், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான ஜி ஜின்பிங் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், ஹாங்காங்கை சீனா முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டது என்றார்.
இதனால் குழப்பம் முடிவுக்கு வந்து ஹாங்காங் சீன ஆட்சிக்கு கீழ் மாறியுள்ளது என அவர் தெரிவித்தார். அதேபோல் பிரிவினைவாதம் மற்றும் ஒருமைப்பாட்டிற்கு எதிரான தைவான் நிலைப்பாட்டை எதிர்ப்பதில் சீனா உறுதியாக உள்ளது என்றும், இதற்கான பெரும் போராட்டத்தையும் நடத்தி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த மாநாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்து 300 நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தின் முடிவில் சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங் தொடர்ந்து 3-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.