பொய்யான செய்திகளை பரப்புபவர்களுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் - துருக்கி அரசு

Prasu
2 years ago
பொய்யான செய்திகளை பரப்புபவர்களுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் - துருக்கி அரசு

துருக்கியில் இனி பொய்யான செய்திகளை பரப்புபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற புதிய சட்டத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. 

துருக்கி அதிபர் எர்டோகன், ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் செயல்படுவதாக குற்றம்சாட்டி வந்தார். 

இதோடு, துருக்கியில் தற்போது வாரம்தோறும் அரசு சார்பில், அந்தந்த வாரம் வெளியான பொய்யான செய்திகள் மற்றும் அதன் உண்மை தன்மை குறித்த பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், இனி பொய்யான தகவல் பரப்பினால், சம்பந்தப்பட்ட நபருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை அந்நாட்டு அரசு கொண்டு வந்தது. இதற்கு தற்போது துருக்கி நாடாளுமன்றமும் ஒப்புதல் அளித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!