உக்ரைனின் 2000 வீரர்களுக்கு பிரான்சில் பயிற்சி: இம்மானுவேல் மக்ரோன் ஒப்புதல்

Prasu
1 year ago
உக்ரைனின் 2000 வீரர்களுக்கு பிரான்சில் பயிற்சி: இம்மானுவேல் மக்ரோன் ஒப்புதல்

பிரான்ஸில் 2,000 உக்ரைன் வீரர்களை வரவேற்கும் பயிற்சித் திட்டத்திற்கு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஒப்புதல் அளித்துள்ளார் என்று பாதுகாப்பு அமைச்சர் செபாஸ்டின் லெகோர்னு கூறினார்.

உக்ரைனிய வீரர்கள் பல வாரங்களுக்கு பிரெஞ்சு இராணுவ பிரிவுகளுக்கு ஒதுக்கப்பட்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார்.

முன்னதாக, உக்ரேனிய வீரர்களுக்கு சீசர் ஹோவிட்சர் (Caesar howitzers) பீரங்கிகளை பயன்படுத்துவதற்கான இராணுவப் பயிற்சி வழங்கப்பட்டது. ஆனால் இப்போது அது அளவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

பிரான்ஸ் இதுவரை 18 சீசர் ஹோவிட்சர்களை உக்ரைனுக்கு வழங்கியுள்ளதாக லெகோர்னு கூறினார். மேலும் ஆறு பீரங்கிகளை அனுப்புவதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் அவர் கூறினார். இது தவிர, தரையிலிருந்து தரைக்கு ஏவுகணைகளை வழங்கவும் பிரான்ஸ் ஆலோசித்துவருகிறது..மேலும், உக்ரைனுக்கு குறைந்த தூரம் பறக்கும் ஏவுகணைகள் மற்றும் விமானங்களை இடைமறிக்கப் பயன்படும் குரோட்டேல் குறுகிய தூர வான் எதிர்ப்பு ஏவுகணைகளை பிரான்ஸ் வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

உக்ரேனிய வீரர்களுக்கு தேவையான பயிற்சியை கணக்கில் எடுத்துக்கொண்டு, இரண்டு மாதங்களுக்குள் குரோட்டல்ஸின் ஏற்றுமதியை முடிப்பதே நோக்கம் என்று தெரிவித்தார்.