பிரான்ஸில் இணைய சேவைகள் முடங்கும் அபாயம் - கடும் அதிருப்தியில் மக்கள்

Prasu
1 year ago
பிரான்ஸில் இணைய சேவைகள் முடங்கும் அபாயம் - கடும் அதிருப்தியில் மக்கள்

பிரான்ஸில் 24 மணித்தியாலமும் மின்சாரத்தில் இயங்கும் இணைய சேவை கட்டமைப்புக்கள் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், பொது மக்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளன. 

பிரான்ஸில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிப்பதற்காக மின்சாரத்தில் கட்டுப்பாடுகளை முன்னெடுக்கும் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

அதற்கமைய, 24 மணித்தியாலங்களும் மின்சாரத்தில் இயங்கும் இணையப்பெட்டிகளை நிறுத்தி வைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

இது குறித்து டிஜிட்டல் மாற்றம் மற்றும் தொலைத்தொடர்புக்கான அமைச்சரின் பிரதிநிதியிடம்  ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

நாட்டு மக்கள் எரிசக்தி நுகர்வினை கட்டுப்பாட்டுடன் மேற்கொள்ள வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

எப்படியிருயிருப்பினும் இணையப்பெட்டிகளை தானியங்கி மூலம் நிறுத்தி வைப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இணையத்தை நிறுத்த திட்டமிடவில்லை என்பதனை தன்னால் உறுதியாக கூற முடியும். 

மக்கள் எரிசக்தி நுகர்வுகளை குறைக்கும் மேலும் பல திட்டங்களை அரசாங்கம் வெளியிடுவதற்கு திட்டமிட்டு வருகின்றன. எனினும் அதில் இணையத்தை முடக்கும் திட்டங்கள் அறிவிக்கப்படாதென அவர் கூறியுள்ளார்.

WiFi சேவைகள் ஒரு போதும் துண்டிக்கப்படாதென அவர் கூறியுள்ளார். அத்துடன் மக்கள் முடிந்த அளவு தாமாகவே மின்சார நுகர்வை குறைத்துக் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேவையற்ற முறையில் மின்சார பயன்பாட்டை நிறுத்தி அரசாங்கத்தின் முயற்சிக்கு உதவுமாறு அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.