இன்று தேர்தல் நடத்தப்பட்டாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிபெற முடியும் -மஹிந்த ராஜபக்ஷ
இன்று தேர்தல் நடத்தப்பட்டாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிபெற முடியும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் குறிப்பிட்ட சிலர் எமக்கு எதிராக உள்ளனர் என்பது எமக்குத் தெரியும். இன்றும் பொதுத்தேர்தல் நடந்தால் எங்களால் வெற்றிபெற முடியும் என்பதுதான் உண்மை.
இன்று நாம் நாடு முழுவதும் சென்று வருகிறோம். இந்த நிலைமையை மிகத் தெளிவாகக் காணமுடிகிறது.
நாவலப்பிட்டியில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணியில் முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், குழந்தைகள் இந்த நாட்டின் எதிர்காலம் என்பதால் அவர்களின் ஊட்டச்சத்து குறித்து கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று ராஜபக்ச கூறினார்.
மக்கள் மீதான வரிச்சுமையை நீக்குவதை உறுதி செய்ய ஒரு கட்சி என்ற வகையில் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.