மோசமான வானிலைக்கு மத்தியில் டெங்கு பரவும் அபாயம்

Prathees
2 years ago
மோசமான வானிலைக்கு மத்தியில் டெங்கு பரவும் அபாயம்

தற்போது நிலவும் சீரற்ற காலநிலையுடன் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, இரத்தினபுரி, காலி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் டெங்கு பரவும் அபாயம் காணப்படுவதாக அதன் சமூக வைத்திய அதிகாரி டொக்டர் இந்திக வீரசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த 9 மாதங்களில் இந்த நாட்டிலிருந்து 60,000 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளமையினால் எதிர்வரும் இரண்டு மாதங்களில் வடகிழக்கு மாகாணங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக வைத்திய அதிகாரி டொக்டர் இந்திக வீரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலைமையை கருத்திற்கொண்டு டெங்கு நுளம்புகள் பரவுவதை தடுக்கும் வகையில் மக்கள் தமது வளாகங்களை சுத்தம் செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!