கடன் நெருக்கடியை சமாளிக்க அதிகபட்ச ஆதரவு வழங்கப்படும்!
Mayoorikka
2 years ago
இலங்கையின் தற்போதைய கடன் நெருக்கடியை சமாளிக்க அதிகபட்ச ஆதரவு வழங்கப்படும் என இருபத்தி இரண்டு கடன் வழங்கும் நாடுகளின் குழுவான பரிஸ் கிளப் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் குறித்து இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, இன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இலங்கையின் கடன் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காணும் முயற்சிகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக பரிஸ் கிளப்பின் இணைத் தலைவர் வில்லியம் ரூஸ் உறுதியளித்ததாக அவர் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த கூட்டங்களின்போது பரிஸ் கிளப்பின் இணைத் தலைவர் வில்லியம் ரூஸை சந்தித்தபோதே அவர் இந்த வாக்குறுதிணை வழங்கியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.