ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் கலந்துரையாடல்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த கலந்துரையாடல் நேற்றைய தினம் தொலைபேசி வாயிலாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தேர்தல் ஒன்று நடைபெறுமாயின் கூட்டணியினை எவ்வாறு அமைத்துக்கொள்வது என்பது தொடர்பில் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியை விமர்சிக்கின்ற அல்லது விமர்சித்தவர்களுக்கும், கட்சியை விட்டு விலகிச்சென்ற எந்தவொரு நபருக்கும், ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன கட்சியின் சார்பில் வேட்பு மனுவினை வழங்காதிருப்பதற்கும், ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவினை விமர்சித்த ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர்களுக்கும் வேட்பு மனுவிற்கான சந்தர்ப்பத்தினை வழங்காதிருக்கவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசிய கட்சி இணைந்து கூட்டணியாக தேர்தலில் களமிறங்கும் பட்சத்தில், கூட்டணிக்குள் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு ஒதுக்கீட்டு அடிப்படையிலேயே வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என கலந்துரையாடலின் போது தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.