விவசாயிகளின் நலன் கருதி கடன் வழங்கும் திட்டம்!
Mayoorikka
2 years ago
விவசாய வங்கியினூடாக விவசாயிகளுக்கு கடன் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
பெரும்போக நெற்செய்கையினை கருத்தில் கொண்டு இவ்வாறு கடன் வழங்க தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இரண்டு இலட்சத்து 7 ஆயிரத்து 103 விவசாயிகளுக்கு கடன் வழங்குவதற்காக 7 ஆயிரத்து 124 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் விவசாயிகளின் நலன் கருதி மேலும் பல திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், சடுதியாக குறைவடைந்துள்ள விவசாய உற்பத்தினை சீர் செய்ய விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.