கடும் மழை காரணமாக நாடாளுமன்ற வளாகம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்?

Mayoorikka
2 years ago
கடும் மழை காரணமாக நாடாளுமன்ற வளாகம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்?

கடும் மழை காரணமாக தியவன்னா ஓயாவின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் நாடாளுமன்ற வளாகம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கபப்பட்டுள்ளது.

தியவன்னா ஓயாவின் நீர் வேகமாக அதிகரித்து வருவதால், எதிர்வரும் நாட்களில் மழை தொடருமானால், நீர் நிரம்பி வழியும் மட்டத்தை எட்டும் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலைமையை கருத்திற் கொண்டு நாடாளுமன்ற வளாகத்துக்குள் நீர் செல்வதை தடுக்கும் வகையில் தியவன்னா ஓயாவில் மணல் மூட்டைகளை வைப்பதற்கு இராணுவத்தினர் ஏற்கனவே ஏற்பாடு செய்துள்ளனர்.

இதேவேளை, நாடாளுமன்ற வளாகத்தின் கீழ் தளத்தில் உள்ள அறைகளின் உடமைகள் அனைத்தும் பாதுகாப்பு நடவடிக்கையாக முதல் மாடிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

par
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!