எரிபொருள் கொண்டு வர பிரியமாலியிடம் இருந்து பணம் பெறப்பட்டதா?
Prathees
2 years ago
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி என்ற பெண்ணிடம் இருந்து இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதிக்கான பணமோ அல்லது பங்களிப்புகளோ பெறப்படவில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் திரு.காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எரிபொருள் இறக்குமதிக்கான பணம் இலங்கை மத்திய வங்கியில் இருந்தும், நாட்டின் ஏனைய வங்கி முறைமைகள் ஊடாகவும் மாத்திரமே பெறப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.