தாமரைக் கோபுரத்தை பொதுமக்கள் பார்வையிடுவதற்கான நேரத்தில் மாற்றம்!

Mayoorikka
2 years ago
தாமரைக் கோபுரத்தை பொதுமக்கள் பார்வையிடுவதற்கான நேரத்தில் மாற்றம்!

கொழும்பு தாமரைக் கோபுரத்தை பொதுமக்கள் பார்வையிடும் நேரத்தை, கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனம் மாற்றியுள்ளது. 

அதன்படி, திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 09.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நுழைவுச்சீட்டுக்கள் விற்பனை செய்யப்படும் என்றும் பொதுமக்கள் இரவு 10.00 மணி வரை கோபுரத்தை பார்வையிடலாம் என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. 

அதேநேரம், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், காலை 09.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நுழைவுச்சீட்டுக்கள் விற்பனை செய்யப்படும் என்றும் பொதுமக்கள் தாமரைக் கோபுரத்தை இரவு 11.00 மணி வரை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவித்துள்ளது. 

பாடசாலை சிறுவர்களுக்கான சிறப்புச் சுற்றுலாக்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் உத்தியோகபூர்வ வருகைகள் முன்கூட்டியே முன்பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!