7 மாத குழந்தையை தெருநாய் கடித்துக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Kanimoli
3 years ago
   7 மாத குழந்தையை தெருநாய் கடித்துக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

   7 மாத குழந்தையை தெருநாய் கடித்துக்கொன்ற சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லக்னோ, உத்தரபிரதேசம் – டெல்லி அமைந்துள்ள நகரம் நொய்டா.

அந்நகரில் செக்டார் 100 பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று கட்டிடவேலை நடைபெற்றது. அங்கு கட்டிட தொழிலாளிகளான தம்பதி தங்கள் 7 மாத கைக்குழந்தையுடன் வேலைக்கு வந்துள்ளனர்.

தம்பதி தங்கள் குழந்தையை கட்டிட பணிகள் நடைபெறும் பகுதிக்கு அருகே வைத்துவிட்டு கட்டிட வேலை செய்துவந்தனர். அப்போது, அந்த குடியிருப்பு பகுதிக்குள் வந்த தெருநாய், தனியாக இருந்த அந்த 7 மாத கைக்குழந்தையை கடித்து குதறியுள்ளது.

குழந்தையின் அழுகை சத்தம் கேட்ட கட்டிட தொழிலாளிகளான பெற்றோர், விரைந்து சென்று பார்த்தபோது, குழந்தையை தெருநாய் கடித்து குதறுவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தெருநாயிடமிருந்து குழந்தையை மீட்ட பெற்றோர், குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் பலத்த காயமடைந்த பச்சிளம் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. 7 மாத பச்சிளம் குழந்தையை தெருநாய் கடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4