கீவ் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானின் ஷாஹெட் 136 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது

Kanimoli
1 year ago
கீவ் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானின் ஷாஹெட் 136 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது

உக்ரைனிய தலைநகர் கீவ் மீது இன்று நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் ஈரானின் ஷாஹெட் 136 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக உளவுத் துறைகள் தகவல் தெரிவித்துள்ளது.

உக்ரைனிய தலைநகர் கீவ்வில் உள்ள ஷெவ்சென்கிவ்ஸ்கி மாவட்டத்தின் மக்கள் குடியிருப்பு பகுதியில் இன்று ரஸ்ய படைகள் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் நான்கு பேர் இறந்து இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மீட்பு படையினர் மற்றொரு உடலைக் கண்டு பிடித்து அகற்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடிபாடுகளுக்கு அடியில் இன்னும் மக்கள் இருக்கலாம் என நம்பப்படுவதால், தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பதற்ற நிலை உருவாகக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் உக்ரைனிய தலைநகர் கீவ் மீது நடத்தப்பட்டுள்ள இந்த ஆளில்லா விமான தாக்குதலில் ஈரானின் ஷாஹெட் 136 ரக ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, உக்ரைனில் ரஸ்ய தாக்குதலுக்கும் ஈரானுக்கும் தொடர்பு உள்ளதா என்பதை உறுதி செய்வதற்கான ஆதாரங்களை தேடுவதாக ஐரோப்பிய தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் ரஸ்யாவிற்கு ஆயுதங்கள் வழங்கி இருப்பதாக வெளிவந்துள்ள செய்தியை ஈரான் மறுத்துள்ளது.

ஆயினும் உளவுத்துறை ஆய்வாளர் ஈரானின் ஷாஹெட் 136 இன் முக்கிய பண்புகளாக டெல்டா இறக்கை வடிவம், ட்ரோனைச் செலுத்தும் பின்புறத்தில் புஷ் ரோட்டார் மற்றும் திசையைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் விங்லெட்டுகள் போன்றவை அமைந்துள்ளன.

இதைப்போன்றே இன்று உக்ரைனிய தலைநகர் கீவ் மீது நடத்தப்பட்ட தாக்குலில் பயன்படுத்தப்பட்ட ஆளில்லா விமானங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

வலதுபுறம், இன்று முன்பு கீவ்வில் பயன்படுத்தப்பட்ட ட்ரோனின் புகைப்படம், அதே நேரத்தில் இடதுபுறத்தில் ஷாஹெட் 136 இன் புகைப்படம் உள்ளது.

பின்புற மோட்டார், இறக்கைகள், மூக்கு வடிவம் மற்றும் டெல்டா இறக்கை வடிவம் அனைத்தும் இன்று உக்ரைனில் நடத்தப்பட்ட ட்ரோன்களுடன் பொருந்துகின்றன,

அத்துடன் பல ராணுவ நிபுணர்கள் இந்த ஆளில்லா விமானத்தை ஷாஹெட் 136 என அடையாளம் கண்டுள்ளனர்.

இந்த ஆளில்லா விமானங்கள் இலக்கை குறிவைத்து விரைவாக இறங்கி வெடிக்கும் முன், காற்றில் வட்டமிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதனால் தான் இந்த ட்ரோன் பொதுவாக காமிகேஸ் ட்ரோன் என்று அழைக்கப்படுகிறது.