போதைக்கு அடிமையான இளைஞனால் மாணவி துஷ்பிரயோகம் - யாழில் சம்பவம்

Mayoorikka
2 years ago
போதைக்கு அடிமையான இளைஞனால் மாணவி துஷ்பிரயோகம் - யாழில் சம்பவம்

போதைக்கு அடிமையான 25 வயதான இளைஞனால் 15 வயது பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் மாணவியின் உறவினர்களால் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட நிலையில் துஸ்பிரயோகம் செய்த இளைஞன் தலைமறைவாகியுள்ளார். 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

பாதிக்கப்பட்ட மாணவியும் , இளைஞனும் காதல் தொடர்பினை கொண்டிருந்துள்ளனர். இளைஞன் போதைக்கு அடிமையானதால் , மாணவி காதல் தொடர்பினை துண்டித்துள்ளார். 

இந்நிலையில் 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பாதிக்கப்பட்ட மாணவியும் , அவரது சகோதரியும் தனியார் கல்வி நிலைய வகுப்புக்களை முடித்துக்கொண்டு வீடு நோக்கி சென்று கொண்டிருந்த வேளை, குறித்த இளைஞன் ஆள் நடமாட்டம் அற்ற பகுதியில் மாணவியை வழிமறித்து அருகில் இருந்த கட்டடத்திற்கு இழுத்து சென்றுள்ளார். 

அதன் போது அங்கிருந்து தப்பித்த மாணவியின் சகோதரி உறவினர்கள் , அயலவர்களை குறித்த பகுதிக்கு அழைத்து வந்துள்ளார். அதனை அவதானித்த குறித்த இளைஞன் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். 

சம்பவம் தொடர்பில் மாணவியின் உறவினர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!