பொதுஜன பெரமுன ஜனாதிபதிக்கு தொடுக்கும் அழுத்தங்கள்: அமைச்சுப் பதவிகள் தாமதம்
Mayoorikka
2 years ago
அமைச்சுப் பதவிகளை கொடுப்பது தொடர்பில் பொதுஜன பெரமுன ஜனாதிபதிக்கு தொடுக்கும் அழுத்தங்கள் காரணமாக அமைச்சுப் பதவிகளுக்கான நியமனம் தொடர்ந்தும் தாமதமடைவதாக ஜனாதிபதி அலுவலகப் பேச்சாளர் Daily Ceylon செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார்.
குறிப்பாக பொதுஜன பெரமுன ஜனாதிபதிக்கு அனுப்பிய ஒவ்வொரு பட்டியலிலும் நாமல், ரோஹித, ஜோன்ஸ்டன் மற்றும் மஹிந்தானந்த ஆகியோர் உள்ளடங்குவதாகவும், அவர்களை இப்பதவிகளுக்கு நியமிப்பதற்கு தற்போது ஜனாதிபதிக்கு விருப்பம் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அதேவேளை 43 ஆவது படைப் பிரிவின் தலைவர் சம்பிக்க ரணவக்கவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது இதனால் சம்பிக்க ரணவக்கவுக்கு அமைச்சுப் பதவி கிடைக்கும் சாத்தியம் உள்ளதாகவும் அவர் கூறினார்.