பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்!
Mayoorikka
2 years ago
பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடுமீதான வாக்கெடுப்பு நிறைவடைந்துள்ளது.
இதற்கமைவாக பிரேரணைக்கு ஆதரவாக 77 வாக்குகளும், எதிராக 17 வாக்குகளும் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவநேசதுறை சந்திரகாந்தன், சாகர காரியவசம், குலசிங்கம் திலீபன், லக்ஷ்மன் கிரியெல்ல, உள்ளிட்டோர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.