கட்டுநாயக்க சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 13 கோடி பெறுமதியான கொக்கேய்ன்: வெளிநாட்டுப் பெண் கைது
13 கோடி ரூபா பெறுமதியான கொக்கேய்ன் போதைப் பொருளை எடுத்துச் சென்ற வெளிநாட்டுப் பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இன்று காலை கைது செய்யப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுதத்த சில்வா தெரிவித்துள்ளார்.
உயர்கல்வி பயின்று வரும் 26 வயதான சுரினாம் நாட்டுப் பெண் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பிரேசிலில் இருந்து கத்தாரின் தோஹாவுக்கு வந்த அவர், அங்கிருந்து இன்று அதிகாலை 05.10 மணியளவில் கட்டார் ஏர்வேஸ் விமானமான KR-662 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அவரது பயணப் பையில் இருந்த 02 கிலோ 553 கிராம் எடையுள்ள 5 கொக்கெய்ன் டின்களை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் கண்டுபிடித்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட யுவதி மற்றும் கொக்கெய்ன் போதைப்பொருள் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.