பொருளாதார தவறுகளுக்காக மன்னிப்பு கேட்ட இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ்
இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் சமீபத்தில் பதவி ஏற்றார். பொருளாதாரத்தை சீரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதற்கிடயே கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட மினி பட்ஜெட்டில் வரி குறைப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
நிறுவனங்களுக்கான வரி உயர்வு, அதிக வருவாய் உள்ளவர்களுக்கு 45 சதவீத வரி உயர்வு போன்றவை ரத்து செய்யப்பட்டன. இந்த வரி குறைப்பு திட்டத்தால் இங்கிலாந்து பெருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் பிரதமர் லிஸ்டிரசுக்கு சொந்த கட்சி எம்.பி.க்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் லிஸ்டிரசுக்கு பதிலாக புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து இங்கிலாந்து நிதி மந்திரியாக இருந்த குவாசி குவாார்டஸ்கை பிரதமர் லிஸ்டிரஸ் பதவி நீக்கம் செய்தார்.
புதிய மந்திரியாக ஜெர்மி ஹன்ட்டை நியமித்தார் இதற்கிடையே பிரதமர் அறிவித்த அனைத்து வரிக் குறைப்புகளையும் புதிய நிதி மந்திரி ஜெர்மி ஹன்ட் முழுமையாக திரும்ப பெற்றார்.
இந்த நிலையில் பொருளாதார தவறுக்காக பிரதமர் லிஸ்டிரஸ் மன்னிப்பு கேட்டார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- நாட்டுக்காக நான் தேர்ந்தெடுக்கப்பட்டதால் பதவியில் இருக்கிறேன். எனது ஒரு மாத கால ஆட்சி சரியாக இல்லை.
ஆனால் பிழைகள் சரி செய்யப்பட்டு விட்டன. நான் பொறுப்பை ஏற்க விரும்புகிறேன். நடந்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
நாங்கள் மிக தூரமாகவும், மிக வேகமாகவும் சென்று விட்டோம். எனது ஆட்சியில் திசைமாற வேண்டும் என்று தெரிந்ததால் நிதி மந்திரியாக ஹன்ட்டை நியமித்தேன் என்றார்.