ரஷ்யாவில் சோகம் - குடியிருப்பு கட்டிடத்தின்மீது ராணுவ விமானம் மோதிய விபத்தில் 2 பேர் மரணம்

#Russia #Attack #Death
Prasu
2 years ago
ரஷ்யாவில் சோகம் - குடியிருப்பு கட்டிடத்தின்மீது ராணுவ விமானம் மோதிய விபத்தில் 2 பேர் மரணம்

ரஷியாவின் தெற்கே எயிஸ்க் நகரில் உள்ள குடியிருப்புக் கட்டிடம் ஒன்றின்மீது ராணுவ விமானம் ஒன்று திடீரென தீப்பிடித்தபடி பறந்து வந்து மோதி விபத்திற்கு உள்ளானது. 

விமானத்தில் இருந்த விமானி குதித்து தப்பிவிட்டார். இதைத் தொடர்ந்து கட்டிடத்தின் முதல் தளத்தில் இருந்து 9-வது தளம் வரை தீப்பற்றியது. 

அதனை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இதில் அனைத்து தளங்களிலும் உள்ள குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. 

இந்த விபத்தில் 2 பேர் பலியானதாகவும், 15க்கும் மேற்பட்டொர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என மீட்புப்படை அதிகாரிகள் தெரிவித்தனர். 

விசாரணையில், சுகோய்-34 ரக ஜெட் போர் விமானத்தின் என்ஜினில் தீப்பிடித்த நிலையில் விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!