புற்றுநோய்க்கு மருந்து - உலக மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் வெளியிட்ட ஜெர்மனி நிறுவனம்

Prasu
2 years ago
புற்றுநோய்க்கு மருந்து - உலக மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் வெளியிட்ட ஜெர்மனி நிறுவனம்

எதிர்வரும் 2030ஆம் ஆண்டளவில் புற்றுநோயை குணப்படுத்தும் மருந்து சாத்தியம் ஆக வாய்ப்புள்ளதாக ஜெர்மன் நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ‘பயோ என் டெக் நிறுவனத்தின் நிறுவனர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்நிறுவனம் கரோனா தடுப்பூசியை உருவாக்கிய பைசர் (Pfizer) உடன் இணைந்து பணியாற்றி இருந்தது.

இப்போது கொரோனா தடுப்பூசி உருவாக்க பயன்படுத்தப்பட்ட அதே எம்ஆர்என்ஏ தொழில்நுட்பத்தை கொண்டு புற்றுநோய்க்கான மருந்தை தயாரிக்கவும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும் இந்த மருந்து குடல் புற்றுநோய், மெலனோமா மற்றும் வேறு சில புற்றுநோய்களுக்கு மட்டுமே பயன்படுத்தும் வகையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அந்நிறுவனத்தின் நிறுவனர்கள் உகுர் சாஹின் மற்றும் ஓஸ்லெம் துரேசி தெரிவித்துள்ளனர்.

“எதிர்வரும்  2030ஆம் ஆண்டளவில் நிச்சயம் இது சாத்தியமாகும் என நாங்கள் நிச்சயம் நம்புகிறோம். மேலும், இதன் செயல்பாடு அறுவை சிகிச்சைக்கு பிறகு நோயாளிகளின் நிலையை பொறுத்து, அவர்களுக்கு தகுந்த வகையில் வழங்கப்படும். இதன் மூலம் அவர்களது உடலில் வேறேதேனும் பகுதியில் ட்யூமர் செல்கள் உள்ளதா என்பதை கண்டறித்து, அதை நீக்கும் பணியை இந்த மருந்து செய்யும் என நம்புகிறோம்” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

புற்றுநோய் சார்ந்த மருந்துகளுக்காக பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து சோதனைகளை பயோ என் டெக்மேற்கொண்டு வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!