அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 19.10.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 19.10.2022

மேஷம்
அசுவினி : பயணங்களால் அலைச்சல் உண்டாகும். என்றாலும் நன்மை கிடைக்கும்.
பரணி : கூட்டாளிகளால் உண்டான பிரச்னைகளை உங்கள் புத்திசாலித்தனத்தால் சரி செய்வீர்கள்.
கார்த்திகை 1 : உறவினர் ஒருவரால் சில நெருக்கடிகளை சந்திப்பீர்கள். வழக்கின் முடிவு தள்ளிப்போகும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4 : வேலை செய்யும் இடத்தில் உங்கள் திறமை வெளிப்படும். வருமானம் அதிகரிக்கும்.
ரோகிணி : உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். நேற்றைய எண்ணம் ஒன்று நிறைவேறும்
மிருகசீரிடம் 1, 2 : அரசு வழியிலான செயலில் முன்னேற்றம் ஏற்படும். நிதிநிலை சீராகும்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4 : உற்சாகமாக செயல்பட்டு நீங்கள் நினைத்ததை அடைவீர்கள். நிதிநிலை உயரும்.
திருவாதிரை : வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் வரும். பழைய கடன்களை அடைப்பீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3 : கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். பழைய பிரச்னை முடிவிற்கு வரும்.

கடகம்
புனர்பூசம் 4 : கவனக்குறைவால் செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். நிதானம் தேவை.
பூசம் : வேலைபளு அதிகரிக்கும். அதிகாரியின் கோபத்திற்கு ஆளாவீர்கள்.
ஆயில்யம் : நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் எதிர்பார்த்த நன்மையை எட்ட முடியாமல் போகும்.

சிம்மம்
மகம் : பணபரிவர்த்தனையில் கவனம் தேவை. குழந்தைகளில் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.
பூரம் : விழிப்புடன் செயல்படுவதால் விரயங்களைத் தவிர்ப்பீர். பயணங்களை ஒத்தி வைப்பீர்கள்.
உத்திரம் 1 : பயணத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் சில நெருக்கடிகளை சந்திப்பீர்கள்.

கன்னி
உத்திரம் 2, 3, 4 : நீங்கள் எதிர்பார்த்த வருமானம் இன்று வந்து சேரும். கடன்களை அடைப்பீர்கள்.
அஸ்தம் : பழைய முதலீடு ஒன்றிலிருந்து எதிர்பாராத லாபம் காண்பீர்கள். நிதிநிலை உயரும்.
சித்திரை 1, 2 : சிந்தித்து செயல்படுவீர்கள் ஒரு முயற்சியில் ஆதாயம் காண்பீர்கள்

துலாம்
சித்திரை 3, 4 : வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் அணுகுமுறை லாபத்தை உண்டாக்கும்..
சுவாதி: புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நேற்றைய எண்ணம் ஒன்று நிறைவேறும்.
விசாகம் 1, 2, 3 : பிறருடன் அனுசரித்துச் செல்வதால் நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள்.

விருச்சிகம்
விசாகம் 4 : உங்கள் திறமையால் குடும்பத்திற்கு பெருமை சேரும். பகைவர்களும் இணைந்து செயல்படுவர்.
அனுஷம் : எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும்.
கேட்டை : இழுபறியாக இருந்த வேலை முடியும். பணியிடத்தில் மற்றவர்கள் பாராட்டுவார்கள்.

தனுசு
மூலம் : முன்னேற்றத்தில் தடை ஏற்பட்டு பின்னர் நடைபெறும். பயம் விலகும். தைரியம் பிறக்கும்.
பூராடம் : உதவி செய்வதாக சொன்னவர்கள் கடைசி நேரத்தில் காணாமல் போவார்கள்.
உத்திராடம் 1 : உத்தியோகத்தில் எதிர்ப்பு வலுக்கும். அமைதி காப்பது நன்மை தரும்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4 : புதிய நண்பர் ஒருவரால் உங்கள் எண்ணம் ஒன்று நிறைவேறும்.
திருவோணம் : குடும்பத்தில் எதிர்பாராமல் ஏற்பட்ட பிரச்னை விலகும்.
அவிட்டம் 1, 2 : உங்கள் மனம் மகிழ்ச்சியில் திளைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.

கும்பம்
அவிட்டம் 3, 4 : உங்களுக்கு மறைமுகமாக தொல்லை கொடுத்தவர்களிடமிருந்து விலக்குவீர்கள்.
சதயம் : பகைவரால் உண்டான பிரச்னைக்கு தீரும். உங்கள் எண்ணம் நிறைவேறும்
பூரட்டாதி 1, 2, 3 : வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

மீனம்
பூரட்டாதி 4 : உறவினர்கள் உதவியுடன் ஒரு செயலில் முன்னேற்றம் காண்பீர்கள்.
உத்திரட்டாதி : வேலை செய்யும் இடத்தில் செல்வாக்கு உயரும். மற்றவர்களால் பாராட்டப் படுவீர்கள்.
ரேவதி : வியாபாரத்தில் உங்கள் முயற்சி இரட்டிப்பு பலனைக் கொடுக்கும். எதிர்பார்த்த பெரும்பணம் வந்து சேரும்.